Ads (728x90)

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட அங்கத்தவர்களின் பதவிக் காலம் மார்ச் 06ம் திகதி ஆரம்பமாகின்றது.

இந் நிறுவனங்களது அங்கத்தவர்கள் தொடர்பில் சட்டபூர்வ நிலைமையை விளக்கும் வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன் பிரகாரம் உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புக்களுக்கு பொருத்தமான அங்கத்தவர்களை வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்யும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு வழங்கப்படுகிறது. இதேவேளை, இந்த வாக்கெடுப்பின் இயல்பு பற்றி அங்கத்தவர்கள் தீர்மானிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய சட்டங்களின் பிரகாரம் உள்ளூராட்சி அங்கத்தவர்கள் கட்சி தாவமுடியாது. 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதில் ஏதேனும் நடைமுறைச் சிக்கல் இருக்கும் பட்சத்தில் எதிர்கால உள்ளுராட்சி தேர்தல்களில் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று அமைச்சு விடுத்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget