Ads (728x90)

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவுக்கு அயல்நாடுகளிலும் ஏராளமான ரசிகர் கள் உள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவிலுள்ள ஆஷ்பர்ன் நகரில் இருந்து நேஹா என்ற ஒரு 6வயது சிறுமி மகேஷ்பாபுவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மகேஷ்பாபுவின் அனைத்து படங்களையும் தான் பார்த்து விட்டதாகவும், மகேஷ்பாபு எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார். அதனால் அவரை எனக்கு ரொம்ப புடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அதோடு எனது இந்த கடிதத்திற்கு மகேஷ்பாபு பதில் அளித்தால் மகிழ்ச்சி அடைவேன் என்றும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக அந்த சிறுமிக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் மகேஷ்பாபு. மேலும், சிறுமி நேஹாவின் போட்டோ மற்றும் கடிதத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மகேஷ்பாபு.

Post a Comment

Recent News

Recent Posts Widget