வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுவாகல் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மக்களின் காணிகளை கடற்படை முகாம் அமைப்பதற்காக அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டமை தொடர்பில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் இன்றைய தினம் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.
இதன் பிரகாரம் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு பொலிஸார் அவரைக் கைதுசெய்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
அத்தோடு, ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அமரர் ஆன்டனி ஜெகநாதன் அவர்களின் மகன் பீற்றர் இளஞ்செழியனும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment