தேர்தலுக்குப் பின்னர் சில அமைச்சுக்கள் தாம் மேற்கொண்ட அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடராமல் இருப்பதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நாட்டின் அரசியல் நிலை எவ்வாறானதாக இருப்பினும் நாட்டின் அபிவிருத்தி மீதான அரசின் திட்டங்களில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் எவ்வித மாற்றமும் இருக்காது.
மக்கள் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டியது அமைச்சின் செயலாளர்களாகிய உங்களது கைகளிலேயே இருக்கிறது. எனவே அமைச்சுகள் திட்டமிட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்விதக் குறைபாடும் தாமதமும் இன்றி மேற்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக விவசாய, உணவு உற்பத்தித் துறைகளின் அபிவிருத்தி சீராக மேற்கொள்ளப்படவேண்டும். அதன்மூலம், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பருவ நிலை மாற்றங்கள் மற்றும் வறட்சி போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்.
தேங்காய் விலை உயர்வு குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தேங்காய்களை விற்பனை செய்யும் தனி நபர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வுத்தரவைப் பிறப்பித்தார்.

Post a Comment