வேற்றுகிரகத்தில் வசிக்கும் உயிர்களின் வாழ்க்கை முறை குறித்து அறிவதில் மனிதர்களுக்கு அதிக ஆர்வம் உள்ளது என்று அமெரிக்காவின் அரிசோனா மாகாண பல்கலைக்கழக உதவி பேராசிரியர் மைக்கேல் வார்னம் தெரிவித்தார்.பூமிக்கு வெளியே வேறு கிரகங்களில் மனிதர்கள் உயிர் வாழ்கிறார்களா என்பதை அறிய அமெரிக்கா உட்பட பல நாடுகள் தீவிர ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்நிலையில், உதவி பேராசிரியர் மைக்கல் வார்னம் கூறியதாவது:
பூமியில் மட்டுமே மனித உயிரினங்கள் வசிக்கின்றன. அதே நேரத்தில் வேற்றுகிரகங்களில் மனித உயிர்கள் போன்று வேறு உயிரினங்களும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதனால் வேற்றுகிரக வாசிகளின் வாழ்க்கை நிலை குறித்து அறிவதில் மனிதர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். வேற்றுகிரகவாசிகள் என்று யாராவது இருக்கிறார்களா என்பது குறித்து தெளிவான ஆராய்ச்சி நம்மிடையே இல்லை. இதுதொடர்பாக பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரைகள் வந்துள்ளன
வேற்றுகிரக உயிர்கள் குறித்து ஆராய்வது தொடர்பாக சாப்ட்வேர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வேற்றுகிரக வாசிகளின் எதிர்வினைகளை கண்டறிய முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமிக்கு வெளியே வேற்றுகிரகவாசிகள் என்று ஒருவர் இருப்பது தெரிந்தால், அது மிகவும் மகிழ்ச்சியான நேரமாக இருக்கும்.
இந்த நிலையில் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து 500 பங்கேற்பாளர்களை வைத்து தனியாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வேற்றுகிரகவாசிகள் என்பது உண்மையாக இருக்கலாம் என பலரும் நேர்மறையான கருத்துகளை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 500 பங்கேற்பாளர்கள், 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஒரு குழுவினரிடம், செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த விண்கல்லில் இருந்த ஒரு பண்டைய நுண்ணுயிரி குறித்த செய்திக் கட்டுரை கொடுக்கப் பட்டது.
மற்றொரு குழுவினரிடம் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருள் குறித்த செய்திக் கட்டுரை தரப்பட்டது. இதில் அவர்கள் வேற்றுகிரகவாசிகள் குறித்து நேர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். வேற்றுகிரகவாசிகள் இருப்பதை நம்புவதாக அதில் பங்கேற்ற ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment