Ads (728x90)

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவதற்கு எடுத்திருந்த தீர்மானத்தை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களினால் வழங்கப்பட்ட ஆலோசனைகளின் படி இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

19 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் பல கருத்துக்கள் நிலவிவருகின்றன. குறித்த திருத்தச் சட்டத்தின் 46 ஆவது பிரிவிலுள்ள விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் கூடிய அவதானத்தை செலுத்தியுள்ளனர்.

இதன்படி பல தரப்பிலிருந்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதனால், உயர் நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கையை கைவிடுமாறு ஜனாதிபதி ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கு வழங்கிய தகவலுக்கு அமைய இந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget