Ads (728x90)

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் ‘பொக்­கெட்’­டுக்­குள் எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் இருக்­கின்­றார். எனது ஆட்­சிக் காலத்­தில் அவரைப் பல தட­வை­கள் பேச்­சுக்கு அழைத்­தேன். வரு­கி­றேன் என்று கூறி­விட்டு கடை­சி­ வ­ரை­யில் வர­வில்லை.

இவ்­வாறு முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துத் தெரி­வித்­தார்.

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணியை ஆத­ரித்து பரப்­புரை மேற்­கொள்­வ­தற்­காக முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நேற்று யாழ்ப்­பா­ணம் வந்­தார். வீர­சிங்­கம் மண்­ட­பத்­தில் நடத்­தப்­பட்ட தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­தா­வது:-

எனது ஆட்­சிக் காலத்­தில் இந்­தப் பகு­தி­யில் அபி­வி­ருத்தி முன்­னெ­டுக்­கப்­பட்­டது. உங்­க­ளு­டைய பிள்­ளை­கள் இன்று இலங்­கை­யில் கல்­வி­யில் முன்­னி­லை­யில் இருக்­கின்­றார்­கள். அது எங்­க­ளுக்­குப் பெரு­மை­யாக இருக்­கின்­றது.
அரச தலை­வர் தேர்­த­லில் தேவை­யில்­லாத கார­ணங்­க­ளால்­தான் தோல்­வி­ய­டைய நேரிட்­டது. ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் இங்கு என்ன அபி­வி­ருத்தி நடந்­தது. எது­வும் நடக்­க­வில்லை. நாம் இந்­தப் பகு­தியை அபி­வி­ருத்தி செய்­த­போது எமக்கு இருந்­தது ஒரே­யொரு எதிர்­பார்ப்­புத்­தான். தெற்கு மக்­கள் அனு­ப­விக்­கும் சுக­போ­கங்­களை வடக்கு மக்­க­ளும் அனு­ப­விக்க வேண்­டும்.

இன்று விவ­சா­யி­கள் பெரும் துன்­பங்­களை எதிர்­நோக்­கின்­றார்­கள். 350 ரூபா­வுக்­கும் பசளை இல்லை. பாகிஸ்­தா­னி­லி­ருந்து பசளை வரும் வரை­யில் நாம் பார்த்­துக் கொண்­டி­ருக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. தாய்­லாந்­தி­லி­ருந்து அரிசி வரும் வரை­யில் நாம் பார்த்­துக் கொண்­டி­ருக்­க­வேண்­டி­யுள்­ளது. தற்­போ­தைய ஆட்­சி­யில் இது­தான் நிலமை.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு, மக்­கள் விடு­தலை முன்­னணி இணைந்த கூட்­டைத்­தான் நாங்­கள் அரசு என்று சொல்­கின்­றோம். எதிர்­கட்­சித் தலை­வ­ராக இரா.சம்­பந்­தன் இருக்­கின்­றார். அவர் ரணி­லின் பொக்­கெட்­டுக்­குள்­தான் இருக்­கின்­றார்.

அர­சி­யல் தீர்­வுக்­காக என்­னு­டன் பேச்­சுக்கு வர வேண்­டும் என்று சம்­பந்­தனை பல தட­வை­கள் அழைத்­தேன். வரு­கின்­றேன் என்று கூறிப் போனார். ஆனால் வர­வில்லை. எதிர்­கட்சி என்று கூறும்­போது அவர்­கள் எதிர்­கட்சி போன்று செயற்­ப­ட­வேண்­டும். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்­தி­ஆ­னந்­தன், கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு 2 கோடி ரூபா வழங்­கப்­பட்­டது என்று கூறு­கின்­றார்.

அவர்­கள் அந்த நிதி­யில் எந்­தத் திட்­டங்­க­ளை­யும் மேற்­கொள்­ள­வில்லை. வடக்கு மக்­களை ஏமாற்­ற­வேண்­டாம். நான் இன­வாதி இல்லை. எனது உற­வி­னர் உங்­கள் பகு­தி­யைச் சேர்ந்­த­வர். குமார் நடே­சன் எனது மைத்­து­னர்  என்­றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget