Ads (728x90)

சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்த வவுனியா – சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விற்பனை நிலைய உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதனை ஒத்திகை பார்க்கும் விதமாக இன்று (20) முதல் அந்தப் பகுதியில் பீடி, சிகரட் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்வதிலிருந்து விற்பனை நிலைய உரிமையாளர்கள் விலகியிருக்கத் தீர்மானித்துள்ளனர்.

மேலும் அதனை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget