என்னுடைய கொள்கையை திமுக புரிந்த பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் என நடிகர் கமல் கூறினார்.வரும் 21-ம் தேதி தன்னுடைய அரசியல் பயணத்தை துவக்க உள்ள நடிகர் கமல் அரசியல் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார். இ.கம்யூ கட்சியை சேர்ந்த நல்லக்கண்ணு, முன்னாள் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் மற்றும் நடிகர் ரஜினி காந்த் ஆகியோரை சந்தித்தார். இந்நிலையில் இன்று தி.மு.க தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்தில் அவரது இல்லத்தில் சந்தித்தார்.
தொடரந்துஅவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: வாழ்த்துக்களை பெற வந்தேன். கருணாநிதி இல்லத்திற்கு இது முதல் முறை அல்ல . எனதுஅரசியல் பயணம் குறித்து தெரிவித்து வாழ்த்து பெற்றேன். அறிவுக்கூர்மை, தமிழ் , தனித்தன்மை, மக்கள் மீது கொண்டஅக்கறை இவையெல்லாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் . ஆட்சி குறித்து அனைவருக்கும் ஓரு கனவு உள்ளது. என்னுடைய கொள்கையை திமு.க புரிந்த பின்னர் கூட்டணி குறித்து யோசிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment