பாலா இயக்கத்தில் ஜோதிகா அதிரடி போலீசாக நடித்து திரைக்கு வந்துள்ள படம் நாச்சியர். இந்த படத்தின் டிரெய்லரில் ஜோதிகா பேசியிருந்த ஆபாச டயலாக்கினால் படத்திற்கு எதிரான விமர்சனங்கள் எழுந்தன. அதனால் அந்த டயலாக்கே படத்திற்கு பெரிய விளம்பரமாகவும் அமைந்தது.இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாச்சியார் படம் திரைக்கு வந்தது.
டிரெய்லரில் பேசியிருந்த ஆபாச டயலாக்கை மியூட் பண்ணியிருந்தார்கள். மேலும், அதிரடி போலீசாக அசத்தலாக நடித்திருந்தார் ஜோதிகா. இதனால் நாச்சியார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், நாச்சியார் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் மட்டும் ரூ. 32 லட்சம் வசூலித்துள்ளது. அதேபோல் திரையிட்ட அனைத்து ஏரியாக்களிலுமே படம் நல்ல வசூலை ஈட்டி வருவதாக நாச்சியார் பட வட்டாரம் தெரிவிக்கிறது.
Post a Comment