ரஷ்யாவின் சைபீரியா மாகாணத்திலுள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 53 பேர் பலியாகினர், பலர் காயமடைந்தனர்.இதுகுறித்து ரஷ்ய அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) கூறும்போது, "செர்பியாவிலுள்ள பிரபல வணிக வளாகமான விண்டர் செரி காம்பிளக்ஸ் மாலின் மேல் அடுக்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த சினிமா பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இதுவரை இந்த தீ விபத்துக்கு குழந்தைகள் உட்பட 53 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் மாயமாகியுள்ளனர்.
தொடர்ந்து 17 மணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளது. தீ விபத்து ஏற்பட்டத்தற்கான இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றன.
வணிக வளாகத்தில் சிக்கிக் கொண்டவர்கள் ஜன்னல்களை உடைத்துக் கொண்டு வெளியேறும் காட்சிகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Post a Comment