Ads (728x90)

கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி சுதந்திர போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபர் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூகிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபர் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக சூகி பொறுப்பேற்றார்.

உடல்நலக் குறைவு காரண மாக அண்மையில் டின் கியாவ் அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. 3 பேர் போட்டியிட்டனர். இதில் ஆங் சான் சூகியின் கட்சியைச் சேர்ந்த வின் மையின்ட் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட் டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget