சேதமாக்கப்பட்ட நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதற்கு வழங்கப்பட்ட கால எல்லையை முறையாக பயன்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.சிதைக்கப்பட்ட மற்றும் கிழிந்த நாணயத்தாள்களை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னராக மாற்றிக்கொள்ளுமாறு மத்தியவங்கி அறிவித்துள்ளது.
இருப்பினும் , வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்கள் விடுமுறை தினம் என்பதனால் நாளை மறுதினத்திற்குள் (29) இந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.
எனவே சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றிக்கொள்வதற்கான காலஅவகாசம் இன்னும் இருதினங்கள் மட்டுமே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment