லஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்ற கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மக்களுக்கான சேவைகளை எந்தவித அடக்குமுறைகளும் இன்றி மிகச் சரியான முறையில் புரிந்துணர்வுடன் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இன்று பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றுகையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டிலுள்ள விவசாயிகளின் நலன்களை மேம்படுத்த இந்த நாட்டில் உருவாகிய எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத வகையில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக வேண்டி வறட்சி நிலவும் பகுதிகளில் 2400 குளங்களை அபிவிருத்தி செய்யப் போவதாகவும் இதற்கான நடவடிக்கைகளை இவ்வருடத்திலேயே ஆரம்பிக்கப் போவதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
Post a Comment