Ads (728x90)

தோல்வி கண்ட அரசியல்வாதிகளை பின்கதவால் மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்த்துவது நம்பிக்கையில்லா பிரேரணையின் உண்மையான நோக்கம் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை பெயரளவில் பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் இதன் உண்மையான இலக்கு ஜனாதிபதியே. ஜனாதிபதிக்கு பாதுகாப்பாக அமையும் பிரதமரையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தோற்கடித்து அதன் மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றுவது சம்பந்தப்பட்ட தரப்புக்களின் நோக்கம் என்று அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.


காணாமல் போனவர்களது குடும்ப சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ கருத்து வெளியிடுகையில், நம்பிக்கையில்லா பிரேரணையில் யார் கைச்சாத்திட்டிருந்தாலும், இதன் உண்மையான நோக்கத்தைக் கண்டறிய வேண்டுமென்று குறிப்பிட்டார்.

கடந்த கால திருட்டுக்கள் பற்றி விசாரிக்க பிரத்தியேக நீதிமன்றத்தை ஸ்தாபிக்கும் தருணத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவதாக அவர் கூறினார்.

நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருத்து வெளியிடுகையில், பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் வகையில் வலுவான சக்தியொன்று அணிதிரண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget