வடக்கு மாகாணத்துக்குத் தமிழ் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வுள்ளார். இது தொடர்பான உத்தரவு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன வால், அவர் பாகிஸ்தான் புறப்படுவதற்கு முன்னதாகப் பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேல்மாகாண ஆளுநராக கடமையாற் றிய கே.சி.லோகேஸ்வரனே வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப் படவுள்ளார்.வடக்குக்கு மட்டுமன்றி 9 மாகாணங்க ளின் ஆளுநர்களையும் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது அரசு. வரலாற்றில் முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கத் தீர்மானித்துள்ளது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ பயணத்தை ஆரம்பிக்க முன்னர் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் கொழும்பில் சந்தித்துப் பேசினார்.
ஆளுநர் ஒருவரின் சேவைக்காலம் ஒரே இடத்தில் மூன்று வருடங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளதால் தற்போது சேவையில் உள்ள அனைத்து ஆளுநர்களும் இடமாற்றப்படவுள்ளனர் என்று அப்போது அறிவித்தார்.
இதன்படி சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா தென் மாகாண ஆளுநராகவும், மத்திய மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க சப்ரகமுவ மாகாண ஆளுநராகவும்,தென்மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார மேல்மாகாண ஆளுநராகவும், மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநராகவும், வடமேல் மாகாண ஆளுநர் அமரா பியசீலி ரத்நாயக்க வடமத்திய மாகாண ஆளுநராகவும், வடமத்திய மாகாண ஆளுநர் பி.பீ.திசாநாயக்க வடமேல் மாகாண ஆளுநராகவும் இடமாற்றப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள் இடமாற்றம் செய்யப்படமாட்டார்கள் என்று அறியமுடிந்தது. இதுவரை மேல் மாகாண ஆளுநர்களாக தமிழர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். அதேபோல் வடக்கு மாகாண ஆளுநர்களாக சிங்களவர்களே நியமனம் பெற்று வந்தனர். இப்போது அந்தப் பாரம்பரியம் மாறுகின்றது.
Post a Comment