இலங்கையில் சகவாழ்வை ஏற்படுத்தி, சட்டவாட்சியை உறுதிசெய்ய அரசாங்கத்தால் முடிந்துள்ளதென அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 37ஆவது அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டை விபரித்து அமைச்சர் உரையாற்றுகையில்,
ஊடக சுதந்திரம் என்ற விடயத்தில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. கண்டி அசம்பாவிதங்களிலும் அரசாங்கம் சட்டத்தையும், ஒழுங்கையும் முறையாக அமுல்படுத்தியது. சட்ட அமுலாக்கத்தில் நிலவிய குறைப்பாடுகள் தொடர்பில் தவறிழைத்த தரப்புக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடென அமைச்சர் கூறினார்.
மனித உரிமைகள் பேரவையின்; 37ஆவது அமர்வில் அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றுகையில்,
சமாதானத்தாலும், சகவாழ்வாலும் மாத்திரம் உருவாக்கிக் கொள்ளக்கூடிய நேர்மையான சமூகத்தையும், பொருளாதார அபிவிருத்தியையும் உறுதிப்படுத்த அரசாங்கம் திடசங்கற்பம் பூண்டுள்ளது. அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், சகல இலங்கையர்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஸ்தாபித்தல், தகவல் அறியும் சட்டத்தை வலுவாக அமுலாக்குதல், பயங்கரவாத சட்டத்தை செல்லுபடியற்றதாக மாற்றி மாற்றுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் முதலான விடயங்கள் தொடர்பிலும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment