நிவின்பாலி நடிப்பில் மலையாளத்தில் தற்போது உருவாகிவரும் படம் 'காயம்குளம் கொச்சுன்னி'. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிவரும் இந்தப்படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் மலபார் பகுதியில் நடைபெற்று வருகிறது.இந்தப்படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது மேலிருந்து கீழே குதித்தபோது நிவின்பாலிக்கு கையில் அடிபட்டது. காயத்தை பரிசோதித்த மருத்துவர்கள், குறைந்தது 15 நாட்களுக்காவது ஒய்வு எடுக்கவேண்டும் என அவரிடம் கூறியுள்ளனர். இதை தொடர்ந்து ரோஷன் ஆண்ட்ரூஸ், தனது படத்தின் மற்ற காட்சிகளை படமாக்கி வருகிறார்.
அதேசமயம் இந்தப்படம் முடிந்ததும் வரும் ஏப்ரலில் நயன்தாராவுடன் நிவின்பாலி ஜோடியாக நடிக்கும் 'லவ் ஆக்சன் டிராமா' படம் துவங்குவதாக இருந்தது. அது நிவின்பாலியின் காயம் மற்றும் ஓய்வால், மே மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது.
Post a Comment