Ads (728x90)

1995-ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படம் வீர்காடி. இந்தப் படத்தில் சல்மான்கான் ஜோடியாக நடித்தவர் பூஜா தட்வால். அதன்பிறகு இந்துஸ்தான், சித்தூர் கி சவுகாந்த் உள்பட பல படங்களில் நடித்தார். சரியான வாய்ப்புகள் இல்லாததால் சினிமாவை விட்டு விலகிய பூஜா, தன் காதலரை திருமணம் செய்து கொண்டு கோவாவில் செட்டிலானார்.

கோவாவில் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த பூஜாவுக்கு திடீரென காசநோய் ஏற்பட்டது. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். நோய் முற்றிவிடவே அவரை மும்பை மருத்துவனையில் சேர்த்த கணவர், அவரை பராமரிக்க முடியாமல் ஆஸ்பத்திரியிலேயே விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் சாப்பாடு வாங்கவும், மருந்து வாங்கவும் பணமில்லாமல் தவித்து வருகிறார் பூஜா.

அங்குள்ளவர்கள் அவருக்கு சாப்பாடும், மருந்தும் வாங்கி கொடுத்து வருகிறார்கள். அவரது இந்த நிலைகுறித்து அவரை பேச வைத்து அதனை வீடியோவாக வெளியிட்டிருக்கிறார்கள். அதில் அவர் தனக்கு உதவ சல்மான்கானை தொடர்பு கொள்ள முயற்சித்ததாவும் அது நடக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.

பூஜாவின் நிலையை கண்டு சல்மான் உதவுவாரா.?

Post a Comment

Recent News

Recent Posts Widget