இலவச ஸ்டென்ட் விநியோகம் காரணமாக அரச மருத்துவமனைகளில் இருதய சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுவரை காலமும் மாதம் தோறும் சராசரியாக 50 இருதய சிசிக்சைகள் மேற்கொள்ளப்பட்டன. சமகாலத்தில் 500 வரையான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நேற்று பாராளுமன்ற விவாதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சத்திர சிகிச்சைகளுக்கு தேவையான விலையுயர்ந்த மருந்துப்பொருட்களையும் வைத்தியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஒளடதங்களை விட மிகவும் பெறுமதியான மருந்து வகைகள் அரச வைத்தியசாலைகளில் உள்ளதாக சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.
Post a Comment