கனடாவின் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் வேன் புகுந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.கனடா டொரான்டோ பகுதியில் மக்கள் அதிகமாக குழுமியிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக வேன் ஒன்று மக்கள் இடையே புகுந்தது. இந்த சம்பவத்தில், 10 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
வேன் டிரைவரை, கனடா போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், டிரைவரின் பெயர் அலேக் மினாசியன் என்றும், அவனுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Post a Comment