21 ஆவது பொதுநலவாய ஒன்றிய விளையாட்டு போட்டியை இம்முறை அவுஸ்ரேலியா பொறுப்பேற்று நடத்தியுள்ளது.இந்த விளையாட்டு போட்டிகள் அவுஸ்ரேலியாவின் கோல்கோஸ்ட் நகரில் கடந்த 4ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகி சிறப்பாக நேற்று நிறைவுபெற்றது.
பதக்கப் பட்டியலில் அவஸ்திரேலியா 198 பதக்கங்களுடன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது. இங்கிலாந்து 45 தங்கம், 45 வெள்ளி மற்றும் 46 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 136 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இலங்கை இப்போட்டிகளில் கலந்துகொண்டு ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் 5 வெண்கலப்பதக்கங்களையும் பெற்று 31 ஆவது இடத்தினை பெற்றுக்கொண்டது.
இதேவேளை, நேற்றிரவு நடைபெற்ற நிறைவு வைபவத்தின் போது வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் பிரவேசித்த காட்சிகள் தொலைக்காட்சியில் இடம்பெறாமையினால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இது ஏற்பாட்டாளர்களினால் தற்செயலாக இடம்பெற்ற தவறு என்று போட்டி ஏற்பாட்டு குழுவின் தலைவர் பீட்டர் பெற்றீ (Peter Beatti) குறிப்பிட்டார். இதனால் தான் மன்னிப்பு கேட்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
இதேவேளை அடுத்த பொதுநலவாய விளையாட்டு போட்டி 2022 ஆண்டு இங்கிலாந்து பேர்மிங்ஹம்மில் நடைபெறவுள்ளது.
Post a Comment