ஒரு இலட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்த வருடத்தில்,இவர்களுள் 80 ஆயிரம் குடும்பங்கள் நிதித்துறையின் மூலம் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. எஞ்சிய 45 ஆயிரம் குடும்பங்களை ஊக்குவிப்பதற்காக பொருளாதார ரீதியிலும் கிராம அபிவிருத்தியின் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்று சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்காக 44 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு;ள்ளது.
Post a Comment