Ads (728x90)

2015 இல் விண்­ணப்­பம் கோரப்­பட்டு 2016 இல் எழுத்­துப் பரீட்­சை­யும்  2017 இல் நேர்­மு­கத் தேர்வும் எழுதியவர்களில் கிராம அலு­வ­லர் நிய­ம­னத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விவரங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.

வடக்­கில் 267 கிரா­ம­ சே­வை­யா­ளர் பிரி­வு­க­ளில் பணி வெற்றிடம் காணப்படுவதாக வழங்கப்பட்ட மாவட்­டச் செய­ல­கங்­க­ளின் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில்  விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டி­ருந்­தன.

அதனடிப்படையில் நேர்முகத் தேர்வில்  தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களே தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதில் 1668 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விவரங்களை கீழ்க்காணும்  இணைய முகவரிக்கு சென்று பார்வையிடலாம்.
http://www.moha.gov.lk/web/images/latest_document/exam_results/gnexamfinalresult.pdf

Post a Comment

Recent News

Recent Posts Widget