விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த ஜி.எஸ்.டி குறித்த வசனத்திற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.இதனால் இந்த திரைப்படம் மிகவும் பிரபலமானது. மெர்சல் வெளியாகி ஐந்து மாதங்களை கடந்திருக்கும் நிலையில் கடந்த மாதம் லண்டனில் நடைபெற்ற நான்காவது பிரிட்டன் திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டுத் திரைப் படத்திற்கான விருதை வென்றது மெர்சல்.
இதைத் தொடர்ந்து தென் கொரியாவில் நடைபெறவுள்ள 22வது புச்சென் சர்வதேச திரைப்படவிழாவில் இப்படம் திரையிடப்படவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் அறிவித்துள்ளது. இந்த செய்தியால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Post a Comment