ஜப்பானில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்துக்கு 5 பேர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியது.இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம், “ஜப்பானில் ஒன்ஷூ தீவுப் பகுதியில் அதிகாலை 1 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது” என்று கூறியுள்ளது.
ஆனால் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஜப்பான் ஊடகங்கள் தரப்பில், இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தினால் ஒடா நகரத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சாலைகள் சில பாதிக்கப்பட்டுள்ளன” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த முழு தகவல் இன்னும் வெளிவரவில்லை.
Post a Comment