கடலில் ஏற்படும் இயற்கை மாற்றத்தால் இன்றும், நாளையும் கடல் அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படும் என்றும், 2 முதல் 3.5 மீட்டர் உயரத்திற்கு அலைகள் உயர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடல்சார் தகவல் மையம் எச்சரித்தது.சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் தனுஷ் கோடிக்கு வாகனங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம்-தனுஷ்கோடி நெடுஞ்சாலை அருகே சுமார் 5 கி.மீ முன் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடலில் குளிக்க தடை அமல்படுத்தப்பட்டுள்ளதால் காலை 8 மணி முதல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சிலர் தடையை மீறி கடலில் இறங்கி நீராடினர். அவர்களை போலீசார் வெளியேற்றினர்.
Post a Comment