Ads (728x90)

இலங்கையில் கூடுதலான நேரடி முதலீடுகளை மேற்கொள்ள தமது நாடு தயாராக இருக்கிறதென பிரிட்டனின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுலாக்கப்படும் என திரு ஃபொக்ஸ் குறிப்பிட்டார். பொதுநலவாய இராஜ்ய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

நேற்றைய சந்திப்பில் இருதரப்பு வர்த்தக உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது. இலங்கையில் நிலவும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை பிரிட்டனின் சர்வதேச வர்த்தக அலுவல்களுக்கான அமைச்சின் இணையத்தில் சேர்க்கப் போவதாக அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கருத்து வெளியிடுகையில், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். சர்வதேச அரங்கில் பிரிட்டன் வழங்கும் ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டி பேசினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget