பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தீபிகா படுகோனே-ரன்வீர் சிங். சில வருடங்களாகவே இவர்கள் காதலித்து வருவதாக வெளியான செய்தி உண்மையாகி தற்போது திருமணத்திற்கும் தயாராகி விட்டார்கள்.இதையடுத்து அவர்கள் இருவரது பெற்றோரும் கலந்து பேசி இந்த ஆண்டு அக்டோபரில் இருந்து டிசம்பருக்குள் ஒரு தேதியில் திருமணத்தை நடத்தி விடலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். அதனால் தற்போது திருமணம் நடத்தும் இடம் குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
மேலும், தீபிகா-ரன்வீரின் திருமணம் ஆடம்பரமில்லாமல் நெருங்கிய உறவினர்களை மட்டுமே அழைத்து நடத்தப்பட உள்ளதாம். அதையடுத்து நடக்கும் திருமண வரவேற்பில் இந்திய திரையுலகினர் அழைக்கப்படுகிறார்களாம்.
Post a Comment