Ads (728x90)

வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகாலமாக உள்ளக இடப்பெயர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பிலான மக்கள் தொகை கணிப்பில் பங்குபற்றுவதற்கு பதிவு செய்யும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக உள்ளக இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கான செயலணி மோதல் காரணமாக 1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்தவர்களின் நேரடி சந்ததியினர் இத்தொகைக் கணிப்பில் பங்குபற்ற முடியும் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இத்தொகைக் கணிப்பில் வடக்கு கிழக்கு மாகாணங்களை அண்டிய மாவட்டங்களான புத்தளம் , அநுராதபுரம் , பொலனறுவை , மொனராகலை அம்பாறை , பதுளை ஆகிய அச்சுறுத்தலுக்கு உள்வாங்கப்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து உள்ளக ரீதியாக இடம்பெயர்ந்த குடும்பங்களும் இத்தொகை கணிப்பில் பங்குபற்ற முடியும்.
இதற்கான குறித்த விண்ணப்ப படிவங்களை கிராம உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் மற்றும் www.taskforcepidp.lk , www.resettlementmin.gov.lk என்ற இணைய முகவரிகளின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்கள் எதிர்வரும் மே மாதம் 25ஆம் திகதிக்கு முன்னராக கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 0112 574013 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளமுடியும் .

Post a Comment

Recent News

Recent Posts Widget