Ads (728x90)

சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஸ்ரேயா. விஜய், தனுஷ், ஜெயம்ரவி, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். சமீபகாலமாக இவருக்கு சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை.

சில வாரங்களுக்கு முன்பு தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவ் என்பவரை மும்பையில் திருமணம் செய்து கொண்டார் ஸ்ரேயா. ஆனபோதும், அவர் தெலுங்கில் வெங்கடேஷ்க்கு ஜோடியாக ஒரு படத்தில் கையெழுத்திட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், தற்போது கணவருடன் தான் ரஷ்யாவில் குடியேறப் போவதாக தெரிகிறது. அதனால் வெங்கடேஷ் படத்தில் அவர் நடிக்கவில்லையாம், அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget