Ads (728x90)

சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்களிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டதன் பின்னரே அந்த பிரேரணை விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான முடிவுகள் எதனையும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்திலேயே எடுக்கவேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ள பிரதமர், எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கருத்தின் காரணமாக இந்த விவகாரம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget