Ads (728x90)

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா இன்று நடைபெறவுள்ளது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய தேசியக் கொடியை குத்துச்சண்டை வீராங்கனை எம்.சி. மேரிகோம் ஏந்திச் செல்லவுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் கடந்த 4-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கின.

விளையாட்டுப் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகின்றன. இந்த நிலையில் மாலையில் போட்டி நிறைவு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் இன்று பிரமாண்டமாக நடைபெற வுள்ளன.

அணிவகுப்பின்போது இந்திய தேசியக் கொடியை மேரிகோம் ஏந்திச் செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக இந்த ஆண்டு மேரி கோம் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget