அஞ்சலி இப்போது புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார். சித்தி பிரச்சினை, காதல், லிவ்விங் டு கெதர் அனைத்திலிருந்தும் வெளியில் வந்து விட்டார். பிரச்சினைகள் காரணமாக உடலை கவனிக்காமல் விட்டதில் எடை கூடிவிட்டதால் தற்போது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறார். தினமும் ஜிம்முக்கு சென்று கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறார். அதனை வீடியோ எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.அஞ்சலி தற்போது ராம் இயக்கும் பேரன்பு படத்தில் மம்முட்டி ஜோடியாக நடித்து வருகிறார். காளி படத்தில் விஜய் ஆண்டனி ஜோடியாக நடிக்கிறார். சசிகுமார் ஜோடியாக நாடோடிகள் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சிறிய இடைவெளிக்கு பிறகு குண்டூர் டாக்கீஸ் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் ரஜினி படத்திலும் அஞ்சலி நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 2018ம் ஆண்டில் அஞ்சலி புத்துணர்வோடு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
Post a Comment