பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க் கட்சியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகளும், எதிராக 122 வாக்குகளும் அளிக்கப்பட்ட அதேவேளை 26 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் (04/04) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. விவாதத்தின் இறுதியில் இரவு 9.30 மணிக்கு வாக்களிப்பு இடம்பெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பலர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது
Post a Comment