திருமணத்திற்கு பிறகு யோகா மற்றும் பிட்னஸ் பயிற்சியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர், உடம்பை ஆரோக்யமாக வைத்திருக்கும் உணவுகள் மற்றும் யோகா பயிற்சிகள் குறித்து இரண்டு புத்தகங்களையும் எழுதி வெளியிட்டதோடு, யோகா டிவிடிக்களையும் வெளியிட்டார்.அதோடு, தனது இணையப்பக்கத்தில் தொடர்ந்து உடல் ஆரோக்யம் குறித்த விழிப்புணர்வு தகவல் களை வெளியிட்டு வரும் ஷில்பா ஷெட்டி, விரைவில் ஒரு இந்தி டிவி சேனலில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் நீதிபதியாக பங்கேற்க உள்ளார். அதன்மூலமும் பிட்னஸ், டயட்ஸ் உணவுகள் குறித்த தகவல்களை வழங்கப்போகிறாராம்.
Post a Comment