Ads (728x90)

கேரளாவில் ஒருகடையில் உணவு பொருட்கள் திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்ட பழங்குடி இளைஞர் மதுவின் குடும்பத்துக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நிதி உதவி அளித்துள்ளதாக இந்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி ஒரு கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை திருடியதாக பழங்குடியின இளைஞர் மது என்பவரை 16 பேர் கொண்ட ஒரு கும்பல் அடித்துக் கொன்றது.

மதுவின் கைகளை கட்டிவைத்து அடித்தும், அவருடன் செல்பி எடுத்தும் அந்த கும்பல் சிறிதுகூட மனிதநேயமின்றி நடந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நாடுமுழுவதும் பெரும் கண்டனத்துக்கு ஆளானது. அந்த பழங்குடி இளைஞர் குற்றுயிரும், குலைஉயிருமாக இருக்கும் போது, போலீஸார் வந்து அழைத்துச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.இதையடுத்து அவரை கொலை செய்த வழக்கில் போலீஸார் பலரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்தை சமூக ஊடங்களில் பார்த்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், மிகுந்த கோபத்துடன் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஆனால், அவரின் ட்விட்டில் 3 முஸ்லிம்கள் பெயரைக் குறிப்பிட்டு கண்டனம் தெரிவ்த்திருந்தது சர்ச்சையானது, ஆனால் தவறை உணர்ந்த சேவாக் மன்னிப்புக் கேட்டார்.

இந்நிலையில் வறுமையில் வாடும் மதுவின் குடும்பத்துக்கு கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் நிதியுதவி வழங்கியுள்ளதாக இந்தி செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மதுவின் குடும்பத்துக்கு ஏற்கனவே பல்வேறு தரப்பினரும், சமூக நல அமைப்புகளும் உதவி செய்து வந்தனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் மதுவின் தாயைச் சந்தித்து உதவி செய்வதாக உறுதியளித்துச் சென்றார்.
 
இந்நிலையில், சேவாக் தனது அறக்கட்டளையில் இருந்து ரூ.1.50 லட்சம் பணத்தை மதுவின் தாயாருக்கு வழங்கியுள்ளதாக இந்தி ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget