Ads (728x90)

தென்னிந்தியத் திரையுலகில் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் வெளிவந்து பல கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்தது. அதன் பின் சரித்திரப் படங்களின் மீது பலருக்கும் ஆசை வந்துவிட்டது. ஒரு மகாபாரதக் கதையை படமாக்க ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் முயன்று வருகிறார்கள். 1000 கோடி ரூபாய் பட்ஜெட் என அறிவித்தார்கள். அதன் பின் சத்தத்தைக் காணோம்.

தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க 'சை ரா' படத்தை ஆரம்பித்துள்ளார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்போது விக்ரம் நடிக்க உள்ள 'மகாவீர் கர்ணா' படம் பற்றி புதிய தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கத்தை இயக்குனர் விமல் முடித்துவிட்டாராம். தமிழ், ஹிந்தியில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படம் தயாராக உள்ளதாம். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இப்படத்தைத் தயாரிக்க உள்ளது. பின் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் படத்தை டப்பிங் செய்து வெளியிட உள்ளார்களாம்.

படத்தின் ஸ்கிரிப்ட்டை சமீபத்தில் இயக்குனர் விமல் சபரிமலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளாராம். அக்டோபர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget