கலிப்போர்னியா மாகாணத்திலுள்ள யூ டியூப் தலைமையகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய பெண் தன்னை தானே சுட்டுக் கொன்று இறந்ததாகவும் அமெரிக்க போலீஸார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து தலைமை காவல் அதிகாரி ஈத் பார்பெரினி கூறும்போது, "கலிபோர்னியா மாகாணத்திலுள்ள யூ டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சுடு நடத்தினார். இதில் 3 பேர் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு அப்பெண் தன்னை தானே சுட்டுக் கொன்று இறந்து விட்டார். அப்பெண் யார் என்ற தகவல் இதுவரை தெரியவில்லை. அப்பெண்ணுடன் உடனிருந்த ஆண் நண்பர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்றார்.
யூ டியூப் அலுவலக பணியாளர் வாதிம் லவ்ருசிக் கூறும் போது , "அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. நான் எனது மேசையிலிருந்து எழுந்து விட்டேன். தற்போது சக பணியாளர்களுடம் ஒரு அறையில் உள்ளேன்" என்றார்.
யூடியூப் அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பி செல்வதற்காக பணியாளர்கள் ஓடும் காட்சிகளை அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நாந்த யூ ட்யூப் தலைமையகத்தில் சுமார் 1700 பேர் பணி புரிகின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்கா போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment