உலகில் பாரிய சரக்கு விமானமான Antonov An-225 Mriya என்ற விமானம் மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளது.மலேசியா கோலாலம்பூரிலிருந்து வந்துள்ள இந்த விமானத்தில் 27 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காகவும் பணியாளர்களின் ஓய்விற்காகவும் மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியதாக பிரதான முகாமையாளர் உப்புல் கலந்சூரிய தெரிவித்துள்ளார்.
உலகின் பாரிய சரக்கு விமானம் ஒன்று இலங்கைக்கு வந்துள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவே ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரத்திற்கு இன்று இரவு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment