நீண்ட நாட்களைக் கொண்ட வாராந்த விடுமுறையை முன்னிட்டு சிவனொளிபாத மலைக்கு தற்பொழுது பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.பக்தர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார வசதிகளையும் மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகார அலுவலகம் மேற்கொண்டு வருகின்றது.
நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில் , பக்தர்களுக்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
தேவையற்ற இடங்களில் நீராடலை தவிர்த்துக் கொள்ளுமாறும், சிவனொளிபாத புனித மலை பிரதேச சூழலை பாதுகாப்பதற்கு பங்களிப்புச் செய்யுமாறும் பொலிசார் பக்தர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரயில் மூலம் சிவனொளிபாத மலைக்கு பயணத்தை மேற்கொள்வோருக்காக ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து நல்ல தண்ணி வரையில் இலங்கை போக்குவரத்துசபை பஸ் சேவைகளை ஹட்டன் டிப்போ நடத்தி வருகின்றது.
இம்முறை சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் அடுத்த மாதம் 29 ஆம் திகதி இடம்பெறும் நோன்மதி தினத்துடன் நிறைவு பெறுகின்றமை குறிப்பிடத்தக்குது.
Post a Comment