பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் நகரதிட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமிற்கும் மாலைதீவு சுற்றுச்சூழல் மற்றும் சக்தி அமைச்சர் தாரிக் இப்றாஹீமுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் SACOSAN மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு வந்திருக்கும் மாலைதீவு சுற்றுச்சூழல் மற்றும் சக்தி அமைச்சர் மற்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இடையில் அண்மையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இருநாட்டு உறவுகள் குறித்தும், சுற்றுச்சுழல் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு மாலைதீவு மற்றும் இலங்கையின் குடிநீர் வழங்கல் தொழில்நுட்பங்கள் தொடர்பாகவும் இருவரும் கலந்துரையாடினார்கள்.
Post a Comment