சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராகவும், அவரின் அரசு வைத்திருக்கும் ரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையில் அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாட்டு ராணுவம் நேற்று இரவு முதல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன. இதனால் சிரியாவில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ராணுவ விமானங்கள் தலைநகர் டமாஸ்கஸில் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதனால் டமாஸ்கஸ் நகரமே ஒரே புகை மண்டலமாகவும், கட்டிடக் குவியல்களாகவும் காட்சி அளிக்கிறது.
சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இங்கு அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதரவுடன் போரிட்டு வருகின்றனர். இந்த மூன்று தரப்பினருக்கும் இடையிலான சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் நாள்தோறும் கொல்லப்படுகின்றனர். சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.
இந்நிலையில், கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த கிழக்கு கட்டா பகுதியில் இருந்த டூமா நகரை சிரியா அரசுப் படைகள் கடந்த வாரம் மீண்டும் கைப்பற்றின. இந்த கைப்பற்றலின்போது, கடந்த 7-ம் தேதி சந்தேகத்திடமான வகையில் ரசாயன குண்டுகளை வீசி சிரிய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சிரியாவுக்கு ஆதரவாக இருக்கும் ரஷ்யா ரசாயான ஆயுதத் தாக்குதலை தடுக்கவில்லை, ஆதரவாக இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். சிரியாவில் உள்ள ரசாயான ஆயுதங்களை அழிக்க அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அறிவித்திருந்தார்.
Post a Comment