Ads (728x90)

தெலுங்கு முன்னணி சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி மேது சைத்தம். வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை நடிகை லட்சுமி மஞ்சு தொகுத்து வழங்கி வருகிறார்.

வாழ்க்கையில் போராடி ஜெயித்த மக்களின் கதை நேர்காணலாக ஒளிபரப்பாகும், சினிமா செலிபிரிட்டிகள் இதில் கலந்து கொள்வார்கள். சினிமா முன்னணி நட்சத்திரங்கள் தங்களது வழக்கமான வேலையை தவிர்த்து சாதரண மக்கள் செய்யும் வேலையை ஒரு நாள் செய்ய வேண்டும். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் ராணா ஒரு நாள் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்தார்.

தற்போது இந்த நிகழ்ச்சியை தமிழின் முன்னணி சேனல் தயாரித்து, ஒளிபரப்ப இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை விஷால் தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிகிறது.

இதுகுறித்து விஷால் கூறும்போது "இது ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது. இன்னும் முடிவாகவில்லை" என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget