யாழ் மாநகரத்தினை அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே மற்றும் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் ஆகியோர் நகரின் வீதிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.இந்த விஜயம் நேற்று முன்தினம் பிற்பகல் வேளையில் இடம்பெற்றது.
எதிர்வரும் ஜுன் 5ம் திகதி தேசிய மரம் நடுகை தினம் நடைபெறவுள்ள நிலையில் யாழ் நகரை அழகுபடுத்தும் நோக்கில் 4000 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் நடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு பொருத்தமான இடங்களையும் மரங்களையும் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் சகிதம் ஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் ஈடுபட்டனர்.
மேலும், யாழ் மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் பாடசாலை அதிபர்களுக்கு மரம் நடும் வேலைத்திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது பசுமையாக்கும் திட்டத்திற்கு மாணவர்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று ஆளுநர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாநகரசபை செயலாளர் ஆர்.ரி.ஜெயசீலன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment