Ads (728x90)

புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப் பாதுகாப்பு மற்றும் எல்லையோர சுவர் குறித்த ஆலோசனையில் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசும்போது,  "சிலர் நமது நாட்டுக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம் நாட்டில்  இருக்கிறார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள் அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று, அவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் விலங்குகள். அவர்களை விரைவில் நாட்டிலிருந்து தூக்கி ஏறிவோம்” என்று கூறினார்.

ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு அமெரிக்க அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜேர்ட் போலிஸ் கூறும்போது,  "புலம் பெயர்ந்தவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் விலங்குகள் அல்ல. குற்றவாளிகள் அல்ல" என்றார்.

கலிபோர்னியா கவர்னர் ஜெர்ரி ப்ரவுன், "ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி தவறான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் யூதர்கள் மீதான ட்ரம்பின் கருத்துக்கு ஜனநாயகக் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் புலம் பெயர்ந்தவர்களுக்கு எதிராக இத்தகைய கருத்தை ட்ரம்ப் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget