Ads (728x90)

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியை மீண்டும் வீழ்த்தி பெங்களூர் அணி 5-வது வெற்றியை பெற்றது.

இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15.1 ஓவரில் 88 ரன்னில் சுருண்டது. ஆரோன் பிஞ்ச் அதிகபட்சமாக 23 பந்தில் 26 ரன் (1 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். உமேஷ்யாதவ் 3 விக்கெட்டும், முகமது சிராஜ், யசுவேந்திர சாஹல், கிராண்ட் ஹோம், மொய்ன் அலி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்.

பின்னர் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் விராட்கோலி 28 பந்தில் 48 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), பார்த்தீவ் பட்டேல் 22 பந்தில் 40 ரன்னும் (7 பவுண்டரி) எடுத்தனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பெற்ற 5-வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி ‘பிளேஆப்’ வாய்ப்பில் நீடிக்கிறது. ஏற்கனவே பஞ்சாப்பை சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்தது. தற்போது அந்த அணியை மீண்டும் தோற்கடித்தது உள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget