Ads (728x90)

விக்டோரியா அணைக்கட்டின் பணிகள் முழுமையாக புனரமைக்கப்பட்டிருப்பதாக அணைக்கட்டு பாதுகாப்பு மற்றும் நீரியல்வள திட்டமிடல் பணிப்பாளர் ஆனந்த செல்லஹேவா தெரிவித்துள்ளார்.

1985ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த அணைக்கட்டு, 30 வருடங்களின் பின்னர் புனரமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, 1400 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது. இதன் கீழ் எட்டு வான்கதவுகள் உள்ளிட்டவை சீர் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று இதுவரையில், இருந்த இலத்திரனியல் கட்டமைப்புக்குப் பதிலாக புதிதாக இலத்திரனியல் கட்டமைப்பொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அணைக்கட்டின் கட்டிடம் இந்நாட்டிலேயே அதி உயர்ந்த கட்டிடமாகும். இது 122 மீற்றர் உயரத்தைக் கொண்டமைந்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget