தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை கொலை செய்வதற்கு புலிகள் திட்டமிட்டுள்ளதாக இராணுவத்தின் புலனாய்வுத் துறைக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்தார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
சுமந்திரன் பெட்ரல் முறைமையை ஏற்றுக் கொண்ட ஒருவர் எனவும், இதனை விடவும் தமிழீழ எதிர்பார்ப்புள்ளவர்களே சுமந்திரனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதேவேளை, தற்பொழுது இந்நாட்டின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை மக்கள் நன்கு அடையாளம் கண்டு வைத்துள்ளனர். இப்படியான ஒருவரை புலிகள் கொலை செய்ய நடவடிக்கை எடுக்குமாயின் நாட்டில் பாரிய பதற்ற நிலைமை உருவாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Post a Comment