Ads (728x90)

இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமாரின் அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இதன்மூலம் சிவகார்த்திகேயன் - ரஹ்மான் கூட்டணி முதல்முறையாக இணைந்துள்ளது.

அறிவியல் தொடர்பான நவீனக் கதை என்று சொல்லப்படுகிறது. இந்தப் படம் 2019-ல் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இஷா கோபிகர், பானுபிரியா, யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள்.

24 ஏஎம் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதையடுத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு என ஒரு மொழிகளில் உருவாகவுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget